இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரம்

 திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்து ஒவ்வொரு கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில்  இன்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.